RSS Feed Widget
/**

நடிகை காஜல் ஆபாச படம் இணையதளத்தில் வெளியீடு.


நடிகையை ஆபாசமாக சித்தரித்து படம் வெளியிட்டது தொடர்பாக, உரிய விளக்கம் தருமாறு இணைய தளத்துக்கு சைபர் கிரைம் போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘டிஷ்யூம்’, ‘கள்வனின் காதலி’, ‘கோ’ ஆகிய படங்களில் நடித்தவர் காஜல். இவரை கடந்த 23ம் தேதி, ஆபாசமாக சித்தரித்து இணையதளம் ஒன்றில் படம் வெளியிடப்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காஜல், 25ம் தேதி போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் கொடுத்தார். அதில் “இலவச விளம்பரங்களை வெளியிடும் இணையதளம் ஒன்றில், என்னை ஆபாசமாக சித்தரித்து படம் வெளியிடப்பட்டுள்ளது. நானே ஆபாசமாக பேசுவதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளது. எனது செல்போன் எண்ணும் போடப்பட்டுள்ளது. எனவே, அந்த இணையதளம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த விளம்பரங்களை பார்த்து இளைஞர்கள் பலர், காஜலுக்கு போன் செய்து பேசி தொல்லை கொடுத்துள்ளனர். அவர் கொடுத்த புகார் தொடர்பாக, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆபாசமாக படத்தை வெளியிட்ட ஆசாமி யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சைபர் கிரைம் உயர் போலீஸ் அதிகாரி கூறுகையில், “ உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட இணையதளத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர்கள் தரப்பில் இருந்து விளக்கம் வந்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
**/