RSS Feed Widget
/**

மாதவிலக்கு தொடர்பாக நீங்கள் அறிய வேண்டியவை..!


மாதவிலக்கு தொடர்பாக நீங்கள் அறிய வேண்டியவை..!மாதவிலக்கு பிரச்சினையாமாத‌வில‌க்கு எ‌ன்பது எ‌ன்ன எ‌ன்றே பல பெ‌ண்க‌ள் அ‌‌றி‌ந்‌திரு‌ப்ப‌தி‌ல்லை. ஏ‌ன் அ‌ந்த நா‌ட்க‌ளி‌ல் வ‌யிறு வ‌‌லி‌க்‌கிறது. ர‌த்த‌ப் போ‌க்கு எ‌த்தனை நா‌ட்க‌ள் வரை இரு‌க்‌கலா‌ம்

வெ‌ளியேறு‌ம் ர‌த்த‌ம் எ‌‌ந்தமா‌தி‌ரியானது எ‌ன்பது எ‌ல்லா‌ப் பெ‌ண்களு‌ம் அ‌றி‌ந்‌திரு‌க்க வே‌ண்டிய ‌விஷயமா‌கு‌ம்.மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்பு முகத்தில் பருமார்பகத்தில் வலி மற்றும் மனதில் ஒரு வித டென்ஷன் என பெண்கள் மத்தியில் இதற்கான அறிகுறிகள் வேறுபடுகிறது.


மாத விலக்கு சமயத்தில் பெண்கள் சத்தான உணவுகள் உட்கொள்ள வேண்டும். மாதவிலக்கு காலத்தில் பெண்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்னை வயிற்று வலி. அடிவயிறுஇடுப்புபின்பகுதிதொடை வரை இந்த வலி பரவும். இத்துடன் வாந்திகுமட்டல்வயிற்றுப் போக்கும் ஏற்படலாம். 

மாதவிலக்கு காலத்தில் முதல் இரண்டு நாட்கள் லேசான வலி ஏற்படுவது இயல்பானது. பல்வேறு காரணங்களால் அதிக வலி ஏற்படுகிறது. கர்ப்பப் பை சுவர்களின் பைப்ராய்டு கட்டி கள்பால்வினை நோய்கருப்பைக் கட்டி அல்லது நீர்க்கட்டி போன்ற காரணங்களால் அதிக வலி ஏற்படலாம்.


இது போன்ற சங்கடங்களில் இருந்து பெண்கள் தங்களைக் காத்துக் கொள்வது குறித்து விளக்கம் அளிக்கிறார் சித்த மருத்துவர் திருமதி.தேவிகா. ஹார்மோன் மாறுபாட்டின் காரணமாக சில பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு ஏற்படலாம். இது அடிப்படையில் பெண்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. 

மனஅழுத்தம்மனநல பாதிப்புஎடை மாறுபாடு போன்ற காரணங்களாலும் மாதவிலக்கு சுழற்சியில் மாற்றம் ஏற்படுகிறது. மூன்று மாதங்களுக்கும் மேல் மாதவிலக்கு சுழற்சியில் பிரச்னை இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.


மாதவிலக்கு சுழற்சியின் இடைவெளியில் சில பெண்களுக்கு ரத்தப் போக்கு ஏற்படுவது உண்டு. இது தானாகவோஉறவுக்குப் பின்னரோ ஏற்படலாம். ஹார்மோன் பிரச்னையால் இது போல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனஅழுத்தம்புதிய கருத்தடை மாத்திரை,கருப்பையில் ஏற்படும் கட்டிகள் ஆகியவற்றால் மாதவிலக்கின் இடையில் ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. 

புற்றுநோயின் அறிகுறியாக வும் இருக்கலாம். மாதவிலக்கு பிரச்சினைகள்உடல் மற்றும் மனரீதியான சங்கடங்களை பெண்களுக்கு ஏற்படுத்துகிறது. எனவே மாதவிலக்கில் சிறிய மாறுதல் தெரிந்தாலும் உடனடியாக சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ள வேண்டியது அவசியம்.


அப்போது பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்து விடலாம்.சிறு வயது முதலே பெண்கள் சத்தான உணவு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்து அதற்கு தகுந்தாற்போல் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். 

மாதவிலக்கின் போது இளஞ்சூடான தண்ணீரில் குளிப்பது மற்றும் சிறிய பயிற்சிகள் மூலம் வலியை குறைத்துக் கொள்ளலாம். மாதவிலக்கின் போது சுகாதாரத்தை கடைபிடிப்பதன் மூலம் தொற்று நோய்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். மாதவிலக்கு தேதியை குறித்து வைப்பதன் மூலம் பிரச்னையை எளிதில் கண்டறியலாம். மாதவிலக்கு தள்ளிப் போகும் குடும்ப பெண்கள் கருத்தரித்துள்ளதா என்பதை சோதிப்பதும் அவசியம்.


மாதவிலக்குக்கு ஒரு வாரம் முன்னதாக உப்பின் அளவைக் குறைக்கலாம். காபியை ஒதுக்கி விடுவதன் மூலம் கோபம் மற்றும் மார்பக வீக்கம்வலியை குறைக்கலாம். இந்த சமயத்தில் கால்சியம் அதிகம் உள்ள பால் இரண்டு வேளை அருந்தலாம். மன அழுத்தம் ஏற்படாதபடி பார்த்துக் கொள்வது அவசியம். 
**/